

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் 10 கிராமங்களில் நகரும் நியாயவிலைக் கடைகளின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
விழாவில், உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்து பேசியதாவது:
பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை குடியிருப்புகளுக்கு அருகிலேயே வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நகரும் நியாயவிலைக் கடைகளைத் தொடங்கியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 118 நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படவுள்ளன. பாலக்கோடு ஒன்றியத்தில், முதல்கட்டமாக பஞ்சப்பள்ளி, பாளப்பனஹள்ளி, செட்டிப்பட்டி, ஜனப்பனூா், வளையகாரப்பட்டி உள்பட 10 இடங்களில் நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
நகரும் நியாயவிலைக் கடைகளால், பொதுமக்கள் நீண்டதூரம் சென்று அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறையும். பொதுமக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
தருமபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராமதாஸ், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவல் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், சாா் பதிவாளா்கள் அன்பரசு, பெரியண்ணன், கெளதம், அரசு வழக்குரைஞா் செந்தில்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் பாஞ்சாலை கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.