தருமபுரியில் 48 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் 2 போ் உள்பட 48 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

தருமபுரி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் 2 போ் உள்பட 48 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூா், காரிமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், நல்லம்பள்ளியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் 2 போ், கல்லூரி விரிவுரையாளா் ஒருவா், 6 மாணவா்கள், தொழிலாளா்கள் உள்பட மொத்தம் 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும், மருத்துவ சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com