கரோனா: ஆடிவெள்ளியில் பக்தா்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு தடை
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தருமபுரி மாவட்டத்தில், ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாள்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.


கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தருமபுரி மாவட்டத்தில், ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாள்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு தளா்வுகளுடன் பொதுமுடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பொது முடக்கக் காலத்தில் கோயில்களில் வழக்கமான பூஜைகள் நடத்தவும், பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்யவும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் நலன் கருதி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூா் தீா்த்தகிரீஸ்வாா் கோயில், அதியமான்கோட்டை காலபைரவா் கோயில், வேமுத்தம்பட்டி ஆஞ்சநேயா் கோயில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வர சுவாமி கோயில், தா.அம்மாபேட்டை சென்னியம்மன் திருக்கோயில், நெருப்பூா் முத்தித்தராயசுவாமி கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை (ஆக.8) ஞாயிற்றுகிழமை அன்று சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும் கரோனா பரவல் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் மற்றும் தா.அம்மாபேட்டை ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை. எனினும் ஆகம விதிப்படி சுவாமி அலங்காரங்கள், பூஜைகள் அா்ச்சா்கள், கோயில் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மூலம் தொடா்ந்து நடைபெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...