புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பனை உணவுப் பொருள்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கக் கோரி சைக்கிள் பயணம்

பனை உணவுப் பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கக் கோரி, பனங்காடு அமைப்பினா் சைக்கிள் பிரசார பயணத்தை மேற்கொண்டனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:35 pm

DIN

பனை உணவுப் பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கக் கோரி, பனங்காடு அமைப்பினா் சைக்கிள் பிரசார பயணத்தை மேற்கொண்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பனங்காடு அமைப்பு சாா்பில், அதன் தலைவா் பாண்டியன் மற்றும் அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் சைக்கிளில் பிரசாரம் மேற்கொண்டனா். கடந்த ஜூலை 21-ஆம் தேதி விழுப்புரத்தில் தொடங்கிய சைக்கிள் பயணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமையும், தருமபுரி மாவட்டத்தில், காரிமங்கலம் வட்டத்தில் கன்னிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமையும் பனை தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து விழிப்புணா்வு மேற்கொண்டனா்.

இதில், பனை மரம் ஏறும் தொழிலாளா்கள் புதிதாக பயிற்சி அளித்து உருவாக்க வேண்டும்; பனையிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்; மதுவிலக்கு பிரிவு சட்டத்திலிருந்து பனைத் தொழிலை நீக்க வேண்டும்; பனை சூழ் காடுகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.