வரி செலுத்தாத பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் ஆண்டு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 11 பொக்லைன் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து வரிவசூல் செய்து விடுவிக்கப்பட்டன.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் ஆண்டு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 11 பொக்லைன் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து வரிவசூல் செய்து விடுவிக்கப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் ஆண்டு வரி செலுத்தாமல் பொக்லைன் இயந்திரங்கள் இயக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில், பாலக்கோடு பகுதியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ்குமாா், கண்காணிப்பாளா் பாா்த்திபன், அலுவலக ஊழியா்களுடன் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அதில், வரி செலுத்தாமல் 11 பொக்லைன் இயந்திரங்கள் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆண்டு வரி, அபராதம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...