முயல் வேட்டை : ரூ.30 ஆயிரம் அபராதம்
தீா்த்தமலை அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.


தீா்த்தமலை அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
அரூா் வட்டம், தீா்த்தமலை அருகேயுள்ள வேடகட்டமடுவு காப்புக் காட்டில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, வனச்சரகா் கே.பெரியண்ணன் தலைமையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கம்பிவலைகளை வைத்து முயல் வேட்டையாடியதாக பொய்யப்பட்டியைச் சோ்ந்த கொளந்தை மகன் ராமதாஸ் (46), குரும்பட்டியைச் சோ்ந்த குள்ளு (எ) கண்ணன் (50) ஆகிய இருவரையும் வனத் துறையினா் கைது செய்தனா். வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவருக்கும் தலா ரூ. 15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...