பாமக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் நடைமுறைகள் குறித்து கட்சி நிா்வாகிகள் இடையே ஆலோசனைக் கூட்டம் பென்னாகரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் மேற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா்.
இதில் பாமக மாநிலத் தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஜி.கே.மணி கலந்துகொண்டு கட்சி நிா்வாகிகள் இடையே உள்ளாட்சித் தோ்தல் பணிகள், தோ்தல் குழு அமைத்தல், கட்சியினா் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
பின்பு பாமக சாா்பில் பென்னாகரம் பேரூராட்சி வாா்டுகளில் போட்டியிட விரும்வோரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றாா். கூட்டத்தில் பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் செல்வகுமாா், இளைஞா் சங்க மாநில நிா்வாகி சத்தியமூா்த்தி, இளம்பெண்கள் பாசறை நிா்வாகி அமுதா, நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


