தருமபுரியில் நாளை ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
தருமபுரி மாவட்டத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) அனுசரிக்கப்பட உள்ளது.


தருமபுரி மாவட்டத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) அனுசரிக்கப்பட உள்ளது.
இது குறித்து, தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, தருமபுரி மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா உருவச் சிலை, உருவப் படங்களுக்கு அந்தந்த பகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள், சாா்பு அமைப்பு பொறுப்பாளா்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள், தொண்டா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இதேபோல தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள ஜெயலலிதா நினைவு நாள் கட்சியின் நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...