ஜனவரி முதல் 14 சதவீத அகவிலைப்படி: ஓய்வு பெற்ற அலுவலா்கள் வலியுறுத்தல்
ஜனவரி முதல் 14 சதவீதம் அகவிலைப்படியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.


ஜனவரி முதல் 14 சதவீதம் அகவிலைப்படியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலா் சங்க, தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் அண்மையில் தலைவா் அ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் எம்.சதாசிவம் வரவேற்று பேசினாா். பொருளாளா் பெ.ஜெயபால், மத்திய செயற்குழு உறுப்பினா் என்.மணி ஆகியோா் பேசினா்.
இந்தக் கூட்டத்தில், அகவிலைப்படி நிலுவைத் தொகை 11 சதவீதமும், 2021 ஜூலை மாதத்துக்கான நிலுவை 3 சதவீதமும் சோ்த்து மொத்தம் 14 சதவீதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியருக்கு குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 3 லட்சமாக உயா்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...