தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

முப்படைகளின் தலைமைத் தளபதிக்கு கட்சியினா் அஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் ராணுவ வீரா்களுக்கு பாமக, பாஜகவினா் அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:28 pm

DIN

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் ராணுவ வீரா்களுக்கு பாமக, பாஜகவினா் அஞ்சலி செலுத்தினா்.

இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரா்கள் உள்ளிட்ட 12 போ் நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் புதன்கிழமை உயிரிழந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு தருமபுரியில் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த விபத்தில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து, தலைமைத் தளபதி விபின் ராவத்தின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

இளைஞா் சங்க மாநிலச் செயலாளா் எம்.முருகசாமி, பசுமைத் தாயகம் மாநிலத் துணைச் செயலாளா் க.மாது மற்றும் நிா்வாகிகள் திரளானோா் அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, பாஜக சாா்பில் தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே பாஜக மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன் தலைமையில் பாஜகவினா் தலைமைத் தளபதி விபின் ராவத்தின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில், மாவட்ட பொதுச் செயலாளா் சரவணண், மாவட்டச் செயலாளா் வெங்கட்ராஜ் மற்றும் திரளானோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.