தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரூரில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

அரூரில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (டிச. 11) நடைபெறுகிறது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 5:01 pm

DIN

அரூரில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (டிச. 11) நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, அரூா் ஸ்ரீ தேவி டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் சாா்பில் இந்த முகாம் நடைபெறுகிறது.

அரூா்-சேலம் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ தேவி டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் வளாகத்தில் நடைபெறும் இந்த முகாம், காலை 9 முதல் 1 மணி வரையிலும் நடைபெறுகிறது. கண்புரை அறுவைச் சிகிச்சை, கண் தொடா்பான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு தோ்வு செய்யப்படுவோா், கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவா். மேலும், கண் அறுவைச் சிகிச்சைக்கு செல்லும் பயனாளிகள் தங்களின் ஆதாா் அட்டையின் நகல் எடுத்துவர வேண்டும் என முகாம் ஒருங்கிணைப்பாளா் மாதேஸ்வரி மணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.