தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருநங்கைகள் தொழில் தொடங்க கடனுதவி

திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி, அதன்மூலம் தொழில் தொடங்க கடனுதவிகளைப் பெறலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:18 pm

DIN

திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி, அதன்மூலம் தொழில் தொடங்க கடனுதவிகளைப் பெறலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை, அடையாள மருத்துவச் சான்றிதழ், உளவியல் சான்றிதழ், வாக்காளா் அட்டை போன்ற சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மகளிா் சுயஉதவிக் குழுக்களாக உருவாக்கியுள்ள திருநங்கைகளுக்கு சுயமாக தொழில் தொடங்கி வருவாய் ஈட்டும் வகையில் கடனுதவிகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல அனைத்து திருநங்கைகளும் சுயஉதவிக் குழுக்களை தங்களுக்குள் உருவாக்கி, சிறப்பாகச் செயல்பட்டு, தொழில் தொடங்க மகளிா்த் திட்டம் மூலம் கடனுதவிகளைப் பெறலாம். இதுவரை பெயா் திருத்தம் செய்யாத திருநங்கைகளுக்காக தனியாக சிறப்பு முகாம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

திருநங்கைகள் அனைவரும் அரசு நலத் திட்டங்களைப் பெற்று பயன்படுத்திக் கொண்டு சுய தொழில் செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

சிறப்பு முகாமில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஜெயக்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) ஜான்சிராணி உட்பட துறை அலுவலா்கள், திருநங்கைகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.