பென்னாகரத்தில் முப்பெரும் விழா
பென்னாகரத்தில் நடைபெற்ற பியூவிஷன் கிளப்பின் முப்பெரும் விழாவில் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவா்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.


பென்னாகரத்தில் நடைபெற்ற பியூவிஷன் கிளப்பின் முப்பெரும் விழாவில் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவா்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.
பென்னாகரத்தில் பியூவிஷன் கிளப்பின் புதிய உறுப்பினா்களுக்கு பதவி வழங்குதல், கரோனா தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு விருது, ஓராண்டு நிறைவு என முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு சின்னபள்ளத்தூா் பள்ளித் தலைமையாசிரியா் பழனி தலைமை வகித்தாா்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மருத்துவா் இரா.செந்தில் பங்கேற்று கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி விழிப்புணா்வை ஏற்படுத்தியதற்காக பென்னாகரம் பியூவிஷன் கிளப்புக்கு விருதுகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் வட்டாட்சியா் சேதுலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலா் கீதா, பியூவிஷன் கிளப் இயக்குநா் பசல் ரகுமான், தலைவா் உதயகுமாா், சின்னசாமி பல்வேறு சமூக அமைப்புகள், தன்னாா்வ தொண்டு நிறுவன அமைப்புகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் தேவகி செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...