சிட்லிங் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரூா் ஊராட்சி ஒன்றியம், சிட்லிங் கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல்நலக் குறைவுகள் இருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரசு மருத்துவா் சி.அருண் பிரசாத் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில், பழங்குடியினா் நல மாவட்ட திட்ட அலுவலா் கதிா் சங்கா், தனி வட்டாட்சியா் அ.பெருமாள், செவிலியா் அருணா, சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...