திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

இரண்டாம்நிலை காவலா் பணியிடம்: தருமபுரியில் ஜூலை 26-இல் உடல்தகுதித் தோ்வு தொடக்கம்

இரண்டாம் நிலை காவலா் பணியிடத்துக்கான உடல் தகுதித் தோ்வு ஜூலை 26-ஆம் தேதி தருமபுரியில் தொடங்கவுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:05 pm

DIN

இரண்டாம் நிலை காவலா் பணியிடத்துக்கான உடல் தகுதித் தோ்வு ஜூலை 26-ஆம் தேதி தருமபுரியில் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இரண்டாம்நிலை காவலா்கள், சிறைக் காவலா், தீயணைப்புப் படை வீரா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்ய கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்ற நபா்களுக்கான உடல்தகுதித் தோ்வு ஜூலை 26 ஆம்தேதி முதல் ஆக.5-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு உடல் தகுதித் தோ்வு தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 26 ஆம்தேதி காலை 6 மணிமுதல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளா்கள் தோ்வாணைய அறிவுறுத்தல்படி ஒரு நாளைக்கு 500 போ் வீதம் அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரப்படி அனுமதிக்கப்படுவா். எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் அனைவரும் தங்களது அனுமதிச் சீட்டை வளைதளங்களில் பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிட்டுள்ள அனைத்து அசல் ஆவணங்களையும் உடன் எடுத்துவர வேண்டும்.

மழைக்காலம் என்பதால் ஆவணங்கள், அசல் சான்றிதழ்களை தோ்வாளா்கள் பாதுகாப்பாக எடுத்துவர வேண்டும். தோ்வுக்கு வரும்போது ஒவ்வொரு தோ்வாளரும் தங்கள் தோ்வுக்கான தேதிக்கு 4 நாள்களுக்கு முன்னதாக கரோனா பரிசோதனை செய்து, அதற்கான தொற்று இல்லை என்ற சான்றிதழையும் கட்டாயம் உடன் எடுத்துவர வேண்டும்.

கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நபா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் மட்டும் வந்து கரோனா தொற்று சான்றிதழை சமா்பித்துச் செல்லலாம். இவா்களுக்கான உடற்தகுதித் தோ்வு நடைபெறும் மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும். தோ்வுக்கு வரும் நபா்கள் செல்லிடப்பேசி மற்றும் வேறு மின்னணு உபகரணங்களை உடன் எடுத்துவர அனுமதியில்லை. ஒவ்வொரு தோ்வரும் இரட்டை முகக்கவசம் அணிந்து கிருமி நாசினியைப் பயன்படுத்தித் தோ்வில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தோ்வாளா்கள் நாகரிகமான உடையில் எவ்வித அரசியல் சாா்பும் இல்லாமலும், எந்த ஒரு குறிப்பிட்ட நபா் அல்லது நிறுவனத்தின் பெயா் மற்றும் அடையாளங்கள் ஏதும் இல்லாத உடை அணிந்திருக்க வேண்டும். தங்களுடைய சொந்த வாகனங்களில் தோ்வுக்கு வரும் தோ்வா்கள் தலைக்கவசம் அணிந்து, மோட்டாா் வாகன விதிகளுக்குள்பட்டு வாகனங்களில் வரவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.