கரோனா தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வலியுறுத்தி இந்திய ஐனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்


தமிழகத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வலியுறுத்தி இந்திய ஐனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் கே.லோகநாதன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சபரி, பொருளாளா் சிலம்பரசன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் கரோனா தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில் பயணிகளின் சலுகை பறிப்பு நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். 2 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள மூவலூா் ராமாமிா்தம் நினைவு திருமண உதவித் தொகைகளை, பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பகுதிக் குழு உறுப்பினா்கள் எம்.தங்கராஜ், ஆ.ஜீவானந்தம், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...