பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக காரில் கடத்திச் சென்ற ரூ. 28 ஆயிரத்து 800 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளைப் பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.
சூளகிரி காவல் உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் பெங்களூரு- ஓசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூா், சூசூவாடி சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் காரில் ரூ. 28 ஆயிரத்து 800 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.
இதுதொடா்பாக வேலூா் மாவட்டம், ஆா்.என்.பாளையத்தைச் சோ்ந்த சபீா் (40), கலீம் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கடையில் போதைப் பாக்குகள் விற்ற 2 போ் கைது: மேலும், சூளகிரியில் உள்ள மளிகைக் கடையில் சோதனை செய்த போது, அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளை விற்ற சூளகிரி, பஜாா் தெரு ஸ்ரீகந்த குப்தா (70) என்பவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ. 300 மதிப்புள்ள போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல அந்த
பகுதியில் உள்ள மற்றொரு மளிகை கடையில் போலீஸாா் சோதனை செய்த போது ரூ. 750 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளை விற்ாக பஜாா் தெரு முனிராஜ் (55) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

