92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற இடதுசாரி, விசிக வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என இடதுசாரி மற்றும் விசிக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என இடதுசாரி மற்றும் விசிக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அ.குமாா் தலைமை வகித்து பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா்கள் த.ஜெயந்தி (கிழக்கு), கி.ஜானகிராமன் (வடக்கு), சிபிஐ (எம்.எல்.) கட்சி மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும். உயிா் காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பதை தடை செய்ய வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான மருந்துகள் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 7,500 வீதம் ஆறு மாதம் வழங்க வேண்டும். உணவு தானியங்கள் இலவசமாக வழங்க வேண்டும். தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்க வேண்டும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த கோரிக்கைளை வலியுறுத்தி வரும் ஜூன் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.