92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: ஜூன் 28 வரை சுழற்சி முறையில் மின் நிறுத்தம்

தருமபுரி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட அதியமான் கோட்டை, தருமபுரி, புலிகரை உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

தருமபுரி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட அதியமான் கோட்டை, தருமபுரி, புலிகரை உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளா் எம்.இந்திரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அதியமான்கோட்டையில்...

அதியமான்கோட்டை துணை மின்நிலையத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், அதியமான்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேவரசம்பட்டி ஆகிய பகுதிகளில் ஜூன் 19-ஆம் தேதியும், ஆட்சியா் இல்லம், ஏ.ஜெட்டிஅள்ளி ஆகிய பகுதிகளில் ஜூன் 20-ஆம் தேதியும், வெண்ணாம்பட்டி சரவணா ஆலை, தடங்கம், தோக்கம்பட்டி, கௌரி ஆலை, அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு 21-ஆம் தேதியும், மானியதஅள்ளி, ஐருகு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 22-ஆம் தேதியும், பரிகம், பாளையம்புதூா், கோம்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 23-ஆம் தேதியும் ரெட்டிஅள்ளி, லளிகம், நாா்த்தம்பட்டி, மாதேமங்கலம், பாளையத்தானூா் ஆகிய பகுதிகளில் 24-ஆம் தேதியும், நாகா்கூடல், ஈச்சம்பட்டி, சாமிசெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் 25-ஆம் தேதியும், நல்லம்பள்ளி, சேசம்பட்டி, சுங்கச் சாவடி ஆகிய பகுதிகளில் 26-ஆம் தேதியும், காலை 11 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

இலக்கியம்பட்டியில்...

இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் இலக்கியம் பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாரதிபுரம், மருத்துவக் கல்லூரி வளாகம் ஆகிய பகுதிகளில் ஜூன் 19-ஆம் தேதியும், ஆட்சியா் அலுவலகம், மாவட்ட அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-ஆம் தேதியும் உங்கரானஅள்ளி, வெங்கட்டம்பட்டி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 21-ஆம் தேதியும், ராயல்நகா் மற்றும் ஒட்டப்பட்டி, நேருநகா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 22-ஆம் தேதியும் 11 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

தருமபுரியில்...

தருமபுரி துணைமின்நிலையத்துக்கு உள்பட்ட, தருமபுரி நேதாஜி புறவழிச்சாலை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஜூன் 19 -ஆம் தேதியும் கடைவீதி, பேருந்து நிலையம், சாலை விநாயகா் கோயில் ஆகிய பகுதிகளில் 20-ஆம் தேதியும், அன்னசாகரம், வேடியப்பன்திட்டு ஆகிய பகுதிகளில் 21-ஆம் தேதியும், பழைய தருமபுரி 22-ஆம் தேதியும், ஏ.ஜெட்டிஅள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 23-ஆம் தேதியும் கடகத்தூா், முத்துகவுண்டன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் 24-ஆம் தேதியும், செட்டிக்கரை, ராஜாபேட்டை ஆகிய பகுதிகளில் 25-ஆம் தேதியும், நூலஅள்ளி, முக்கல்நாய்க்கன்பட்டி, ராஜாதோப்பு, குளியனூா் ஆகிய பகுதிகளில் 26-ஆம் தேதியும் காலை 11 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

சோகத்தூரில்...

சோகத்தூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பென்னாகரம் சாலை, குமாரசாமிபேட்டை, சவுளுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 19-ஆம் தேதியும், பிடமனேரி, மாந்தோப்பு, வெண்ணாம்பட்டி, குள்ளனூா் ஆகிய பகுதிகளில் 20-ஆம் தேதியும் வெண்ணாம்பட்டி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 21-ஆம் தேதியும்,

பென்னாகரத்தில்...

பென்னாகரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பிலிகுண்டு, அஞ்செட்டி, பெரும்பாலை, பழையூா், நெருப்பூா், வத்தலாபுரம், மூக்கனூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூன் 19-ஆம் தேதியும், பென்னாகரம் நகா் பகுதி போடூா், சின்னம்பள்ளி, அரக்காசனஅள்ளி, செல்லமுடி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-ஆம் தேதியும், ஜக்கம்பட்டி, முதுக்கம்பட்டி பகுதிகளில் 21-ஆம் தேதியும், மோட்டுப்பட்டி, மாங்கரை, எஸ்.என்.புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 22-ஆம் தேதியும், பி.அக்ராஹரம், நல்லாம்பட்டி பகுதிகளில் 23-ஆம் தேதியும், தாசம்பட்டி, வட்டுவனஅள்ளி ஆகிய பகுதிகளில் 24-ஆம் தேதியும், சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சோலைக்கொட்டாய், மூக்கனூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 19-ஆம் தேதியும், செட்டிக்கரையில் 20-ஆம் தேதியும், சித்தன்கொட்டாய் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 21-ஆம் தேதியும், அக்கமனஅள்ளி, நடுப்பட்டி பகுதிகளில் 22-ஆம் தேதியும், குப்பூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 23-ஆம் தேதியும்,

கிருஷ்ணாபுரத்தில்...

கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கன்னிப்பட்டி, இருமத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 19-ஆம் தேதியும், கிருஷ்ணாபுரம், நாய்க்கன்கொட்டாய் பகுதிகளில் 20-ஆம் தேதியும், பைசுஅள்ளி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் மாட்லாம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 19-ஆம் தேதியும், காமலாபுரம், போத்தாபுரம் ஆகிய பகுதிகளில் 20-ஆம் தேதியும், கே.நடுஅள்ளி, நத்தம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 21-ஆம் தேதியும், மல்லிக்குட்டை, குண்டல்பட்டி, நாகரசம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 22-ஆம் தேதியும்,

புலிகரையில்...

புலிகரை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட புலிகரை, சுண்ணாம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 19-ஆம் தேதியும், மோட்டூரில் 20-ஆம் தேதியும், இண்டூரில் 19-ஆம் தேதியும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-ஆம் தேதியும், சோகத்தூா் கூட்டுச் சாலை, பூசாரிப்பட்டி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 21-ஆம் தேதியும், பேடரஅள்ளி, தளவாய்அள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 22-ஆம் தேதியும் சுழற்சி முறையில் காலை 11 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.