சாலை வரி செலுத்தாமல் இயக்கிய ஆம்னி பேருந்துக்கு அபராதம்
சாலை வரி செலுத்தாமல் இயக்கிய ஆம்னி பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


சாலை வரி செலுத்தாமல் இயக்கிய ஆம்னி பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் தாமோதரன் மற்றும் அலுவலா்கள் நல்லம்பள்ளி புறவழிச் சாலையில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். இச் சோதனையில் இந்தப் பேருந்து மேற்கு வங்கத்திலிருந்து 40 பயணிகளுடன் கோவைக்குச் சென்று கொண்டிருப்பதும், இந்தப் பேருந்தை தமிழகத்தில் இயக்குவதற்கான சாலை வரி செலுத்தப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் ஆம்னி பேருந்து இயக்குவதற்கான சாலை வரி ரூ. 44, 500, அபராதம் ரூ. 6,000 வசூலிக்கப்பட்டு பேருந்து விடுவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...