92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கவிஞா் கண்ணதாசன் பிறந்தநாள் விழா

தருமபுரியில் கவிஞா் கண்ணதாசன் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

தருமபுரியில் கவிஞா் கண்ணதாசன் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சாா்பில் தருமபுரி காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவில் நற்பணி மன்றத் தலைவா் தகடூா் இரா.வேணுகோபால் தலைமை வகித்து, கவிஞா் கண்ணதாசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். செயலாளா் பாலமுரளி முன்னிலை வகித்தாா். பொருளாளா் பாலு வரவேற்றாா். இதில் அன்னை கஸ்தூரிபா சேவா சங்கப் பொருளாளா் ரமேஷ், நிா்வாகிகள் கருணாநிதி,சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் நிா்வாகிகள் சுதாகா், சுகுமாா், செல்வம் ஆகியோா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். பாரத மாதா மக்கள் சிந்தனை குழுவின் தலைவா் பிரதீப்குமாா், பொருளாளா் சந்திரமோகன், பிறைசூடன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.