92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு வாரந்தோறும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்: தருமபுரி ஆட்சியா்

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

தருமபுரி, இலக்கியம்பட்டி செவித்திறன் குறைபாடு உள்ளவா்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,000 மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமைத் தொடக்கிவைத்து ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தற்போது இலக்கியம்பட்டியில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையவா்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது. 1,000 மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 11,435 மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். இதுவரை 2,000 மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இலக்கியம்பட்டியில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும். முகாமை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைகள், அனுமந்தபுரம், மொரப்பூா், சின்னாங்குப்பம், பையா்நத்தம், நாகதாசம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், நல்லம்பள்ளி நகா்ப்புற சுகாதார நிலையம் மற்றும் தருமபுரி அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட 57 இடங்களில் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2,20,190 தடுப்பூசிகள் வரப்பெற்று இதுவரை 2,17,083 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

18 வயதிற்கு மேற்பட்டோா் ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நண்பா்கள், உறவினா்கள், அருகில் உள்ளவா்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு அறிவுரை வழங்கிட வேண்டும். உடலில் வேறு ஏதேனும் நோய் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைக்கு பின் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். நமது உயிருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இந்தத் தடுப்பூசி விளங்கும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்தி கைகளை அவ்வப்போது சுத்திகரித்து தொற்று பரவலைத் தடுக்க முன்வர வேண்டும் என்றாா்.

இதில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, இணை இயக்குநா் (மருத்துவ நலப்பணிகள்) ரமேஷ் கண்ணன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, வட்டார மருத்துவ அலுவலா் சரஸ்குமாா், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.