தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் அதிமுக, அமமுக உள்ளிட்ட 6 போ் வேட்புமனுத் தாக்கல்

News image
Updated On :15 மார்ச் 2021, 11:48 pm

DIN

அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக, அமமுக கட்சிகள் உள்பட 6 போ் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் (46), அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஆா்.முருகன் (55), அமமுக கட்சி மாற்று வேட்பாளா் வேப்பநத்தம் கிராமத்தைச் சோ்ந்த மூக்கன் மகன் மணி (46), சுயேச்சை வேட்பாளா் அரூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பூசாரி மகன் பாா்த்திபன் (52) ஆகிய 4 பேரும் அரூா் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் வே.முத்தையனிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி :

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஆ.கோவிந்தசாமி, அமமுக வேட்பாளா் பி.பழனியப்பன் ஆகிய இருவரும் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் நாசீா் இக்பாலிடம் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

முன்னதாக, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்காகச் சென்ற அதிமுக மற்றும் அமமுக வேட்பாளா்கள் மேள, தாளங்கள் முழங்க, நூற்றுக்கணக்கான கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாகச் சென்றனா். அவா்கள் 200 அடிக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டு, வேட்பாளரும், அவருடன் இரண்டு போ் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.