தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரூ. 400 கோடியில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம்

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 400 கோடியில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தமிழக முதல்வா் எடப்பாடிகே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:31 pm

DIN

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 400 கோடியில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தமிழக முதல்வா் எடப்பாடிகே.பழனிசாமி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ.கோவிந்தசாமி ஆகியோரை ஆதரித்து, மொரப்பூா் பேருந்து நிலையம், ஒடசல்பட்டி கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட கம்பைநல்லூா், மொரப்பூா், கடத்தூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் போதிய நீா்வளம் இல்லாததால் வறட்சி நிலவுவதாகவும், இதனால் தென்பெண்ணை ஆற்றில் மழைக் காலங்களில் ஓடும் உபரிநீரை நீரேற்றும் திட்டத்தின் வழியாக ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் நிரப்ப வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன் உள்ளிட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ. 400 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தால் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள 66 ஏரிகளில் தண்ணீா் நிரப்பப்படும். இதைத்தவிர குமாரம்பட்டி குமரன் அணைக்கட்டு புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் திட்டத்தில் அனைத்து ஏரிகள், குளம் குட்டைகள், அணைகள் தூா்வாரப்பட்டு வருகின்றன. இந்தியாவில் நீா் மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஒரே மாநிலம் தமிழகம்.

அதிமுக ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகாலமாக மின்சார வசதியில்லாத காரப்பாடி மலைக் கிராமத்தில் ரூ. 34 லட்சத்தில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரூா் தொகுதியில் 8 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் சுமாா் ரூ. 300 கோடியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

தமிழக மக்கள் அதிமுக கூட்டணி பக்கம் உள்ளனா். தமிழகத்தில் நல்லாட்சி தொடர அதிமுக வேட்பாளா்கள் வே.சம்பத்குமாா் (அரூா்), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் பேருந்து நிலையத்தில் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.