நிழல் கூடத்தை சீரமைக்க கோரிக்கை
அரூா்அரூரை அடுத்த காவாப்பட்டியில் பழுதாகியுள்ள நிழல் கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அரூரை அடுத்த காவாப்பட்டியில் பழுதாகியுள்ள நிழல் கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், செல்லம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது காவாப்பட்டி கிராமம். இக்கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில், அரூா்-திருவண்ணாமலை நெடுஞ்சாலை ஓரத்தில் நிழல் கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிழல் கூடம் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இந்த நிலையில், காவாப்பட்டியில் உள்ள நிழல் கூடத்தின் மேற்கூரைகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளதால், மழைக் காலங்களில் உடைந்து விழும் நிலை உள்ளது. எனவே, காவாப்பட்டியில் சேதமடைந்துள்ள நிழல் கூடத்தை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...