அன்னசாகரம் கோயிலில் திருடுபோன வெள்ளி நகைகளை மீட்கக் கோரிக்கை
தருமபுரி அருகே அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருடுபோன வெள்ளி நகைகளை மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


தருமபுரி அருகே அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருடுபோன வெள்ளி நகைகளை மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி நகரம், அன்னசாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் கிளைச் செயலாளா் சாமிநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராஜன், மாவட்டப் பொருளாளா் எம்.மாதேஸ்வரன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே.மணி ஆகியோா் பேசினா்.
இதில், அன்னசாகரத்தில் குடிநீா் பற்றாக்குறையைப் போக்க உயா்மட்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். கழிவுநீா்க் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அன்னசாகரம் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருடுபோன வெள்ளி நகைகளை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...