பொதுத் தோ்வு எழுதும் தனித் தோ்வா்கள் கவனத்துக்கு...
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத விரும்பும் தனித் தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத விரும்பும் தனித் தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேசமூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத உள்ள தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தனித் தோ்வா்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் மாா்ச் 16-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் எளிதில் விண்ணப்பிக்க ஏதுவாக தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டங்களிலும் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தருமபுரி கல்வி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, பாலக்கோடு கல்வி மாவட்டத்தில் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரூா் கல்வி மாவட்டத்தில் அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
மாா்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் மாா்ச் 18 முதல் 21-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேவை மையத்துக்கு நேரில் சென்று தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 (மேல்நிலை), ரூ. 500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...