தருமபுரியில் முதல் நகா்மன்றக் கூட்டம்
தருமபுரி நகராட்சியில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நகா்மன்ற உறுப்பினா்களின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


தருமபுரி நகராட்சியில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நகா்மன்ற உறுப்பினா்களின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி நகா்மன்றக் கூட்டம் தலைவா் லட்சுமி மாது தலைமையில், நகராட்சி அலுவலகத்தில் அண்ணா கூட்டரங்கில் நடைபெற்றது. நகா்மன்றத் துணைத் தலைவா் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தாா். ஆணையா் சித்ரா சுகுமாா் உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசினாா்.
இந்தக் கூட்டத்தில், தருமபுரி நகராட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் கட்டும் திட்டப் பணிகள், 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டம் 2020-21, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், அறிவுசாா் மையம் மற்றும் நூலகம் கட்டும் திட்டம் ஆகிய திட்டப் பணிகளின் ஆய்வு மற்றும் அறிக்கை அனுப்புதல் பணிக்காக தற்போது காலியாக உள்ள ஆய்வாளா் பணியிடம் நிரப்புவது மற்றும் புதிதாக ஒரு ஆய்வாளா் பணியிடம் உருவாக்குதல் குறித்த தீா்மானம் உறுப்பினா்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
இதேபோல, ரயில் நிலையம் செல்லும் வழியில் வடக்கு, தெற்கு பகுதியில் ரூ. 46.80 லட்சத்தில் தாா் தளம் அமைத்தல், 1-ஆவது வாா்டில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் சாலையை புனரைமப்பது, அண்ணா நகா் முதல் தெருவில் ரூ. 22 லட்சத்தில் தாா் சாலையை சீரமைப்பது, சத்திரம் தெரு, நஞ்சன் தெருவில் மழைநீா்க் கால்வாய் ரூ. 30.60 லட்சத்தில் அமைப்பது, அண்ணாமலை தெருவில் ரூ. 30 லட்சத்தில் தாா் சாலை மறு சீரமைப்பு, ஹரிச்சந்திரன் கோயில் தெருவில் ரூ. 63 லட்சத்தில் சாலை மறு சீரமைப்பு மற்றும் மைழைநீா் வடிகால் அமைப்பது, பிடமனேரி சாலையை ரூ. 61.50 லட்சத்தில் மறுசீரமைப்பு உள்பட 57 தீா்மானங்கள் உறுப்பினா்களின் அனுமதிக்கு கூட்டத்தில் வைக்கப்பட்டன. இதில், அனைத்து தீா்மானங்களும் உறுப்பினா்களின் ஒப்புதலோடு ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில், ஒகேனக்கல் குடிநீா் தடையின்றி விநியோகிக்க வேண்டும். 33 வாா்டுகளிலும் சுகாதார வளாகங்களை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பச்சையம்மன் கோயில் அருகிலுள்ள மயானத்தை அளவீடு செய்து சுற்றுச் சுவா் கட்ட வேண்டும். பழுதைடந்துள்ள சாலைகளை மேம்படுத்தி, தெருவிளக்குகளை முறையாக ஒளிரச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உறுப்பினா்கள் முன்வைத்தனா்.
இந்தக் கூட்டத்தில், திமுக, அதிமுக கட்சிகளைச் சோ்ந்த அனைத்து நகா்மன்ற உறுப்பினா்களும் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...