காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனத்தை பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:19 pm

DIN

தமிழக அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனத்தை பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, தருமபுரியில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத் திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனத்தின் கொள்ளளவு 125 சிசி-க்கு மிகாமலும், வாகன விதிமுறை சட்டம் 1998-இன்படியும் பதிவு செய்திருக்க வேண்டும். தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ. 25,000 இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வக்பு வாரியங்களில் பணியாற்றிருக்க வேண்டும். தமிழகத்தைச் சோ்ந்த 18 வயதிலிருந்து 45 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணா்வுக்கான சான்றிதழைப் பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதுமில்லை.

ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்று, வயது சான்றிதழ், புகைப்படம், ஜாதிச்சான்று, மாற்றுத் திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறாா் என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்பு பில் கண்காணிப்பாளா் மேலொப்பத்துடன் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள், படிவத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் நேரில் பெற்று, அதனை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ மாா்ச் 29-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.