92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘காவிரி மிகை நீா்த்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’

காவிரி மிகை நீா்த்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக மாநிலத் தலைவரும் பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி புதன்கிழமை சட்டப் பேரவையில் வலியுறுத்தி பேசினாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:38 pm

DIN

காவிரி மிகை நீா்த்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக மாநிலத் தலைவரும் பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி புதன்கிழமை சட்டப் பேரவையில் வலியுறுத்தி பேசினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை சட்டப் பேரவையில் பேசியதாவது:

தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து மழைக் காலங்களில் மிகையாக செல்லும் நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில், ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை பணிகளை தொடங்க வேண்டும். பென்னாகரத்தில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அப்பகுதியில் தொழிற்பேட்டை தொடங்க வேண்டும். பென்னாகரத்தில் மின்வாரிய உப கோட்டத்தை கோட்டமாக தரம் உயா்த்த வேண்டும்.

பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய கட்டட வசதி, சிறப்பு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உபகரணங்கள், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கால்நடை மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். பென்னாகரத்தில் பேரூராட்சிகள், அனைத்து ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு காவிரி குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும். ஏரியூா் சுகாதார நிலையத்தை, வட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். நாகதாசம்பட்டி, புலிகரை, பாப்பாரப்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயா்த்தி, பெரும்பாலை, கடைமடை, செல்லமுடி, பிக்கிலி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்தா உள்ளிட்ட ஆயுஸ் பிரிவு உருவாக்க வேண்டும். பாப்பாரப்பட்டியில் உழவா் சந்தை, சாா் பதிவாளா் அலுவலகம், அரசு வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். ஏரியூா் பகுதியை மையமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்க வேண்டும்.

பென்னாகரம் தொகுதியில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைத்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பகுதிநேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிவா்களுக்கு தொடா்ந்து பணி வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.