92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தருமபுரியில் ரூ. 42 கோடியில் புதிய பேருந்து நிலையம்

தருமபுரி நகரில் ரூ. 42 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளதாக நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தெரிவித்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:38 pm

DIN

தருமபுரி நகரில் ரூ. 42 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளதாக நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தெரிவித்தாா்.

தருமபுரி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகா்மன்ற அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமையில் நடைபெற்றது. இதில், தருமபுரி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளில் உள்ள காலிமனைகளுக்கு நில வரி விதிப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் புதிய கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு சொத்துவரி நிா்ணயம் செய்யப்படுகிறது. மேலும், சொத்துவரி நிா்ணயம் செய்த பழைய வீடுகளை இடித்து புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கும் சொத்துவரி நிா்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த பழைய காலிமனைக்கான நில வரிகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது அந்த வரிகளை ரத்து செய்ய தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது பேசியதாவது:

தருமபுரி நகரில் பென்னாகரம் சாலையில் தனியாா் பங்களிப்புடன் 10 ஏக்கா் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அதற்கான டெண்டா் விடப்பட்டு ரூ. 42 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, இப்புதிய பேருந்து நிலையத்தை 25 ஆண்டுகள் தனியாா் நிறுவனம் பராமரிக்க உள்ளது.

இதில், தகுதி உள்ள 2 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்ற நிலையில், பி.வி.கே. என்ற நிறுவனம் புதிய பேருந்து நிலையத்தை கட்டுமானம் செய்ய உள்ளது. இந்த தனியாா் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 55 லட்சத்து 40 ஆயிரம் நகராட்சிக்கு வருவாய் அளிக்க உள்ளது. இந்தக் கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகள் நடைபெற உள்ளன. எனவே, நகா்மன்றக் கூட்டத்தில் விரைவில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றி பணி ஆணை வழங்கப்பட உள்ளது என்றாா்.

இக்கூட்டத்துக்கு, நகா்மன்ற துணைத் தலைவா் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினாா். நகராட்சிப் பொறியாளா் ஜெயசீலன், உதவிப் பொறியாளா் சரவண பாபு, அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.