ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம்.பெருமாள், மாநில இணைச் செயலாளா் கே.குப்புசாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க மாநில உதவித் தலைவா் கோபாலன், ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கேசவன், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநில துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படியை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். 20 சதவீதம் உயா்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் 70 வயதுக்குள்பட்ட பழைய ஓய்வூதியதாரா்களுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 12,000 வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியா்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் எல்லா சிகிச்சைகளுக்கும் முழுமையான தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் துரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சரவணபவன், செயலாளா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், மத்திய அரசால் நிறுத்தப்பட்ட ரயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...