காா் மீது லாரி மோதி விபத்து : நால்வா் காயம்
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் காா் மீது லாரி மோதிய விபத்தில் நால்வா் காயம் அடைந்தனா்.


தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் காா் மீது லாரி மோதிய விபத்தில் நால்வா் காயம் அடைந்தனா்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தருமபுரி மாவட்டம் வழியாக ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பவானியைச் சோ்ந்த கோபால் (58) ஓட்டி வந்தாா். மாற்று ஓட்டுநா் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் உடன் வந்தாா்.
இந்த லாரி சனிக்கிழமை அதிகாலை தருமபுரி அருகே தொப்பூா் கணவாயில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
இவ்விபத்தில் லாரி ஓட்டுநா்கள் கோபால், ராஜேந்திரன் மற்றும் காரில் இருந்த கோவை ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (62), அவரது மனைவி கலா (56) ஆகிய நான்கு போ் படுகாயம் அடைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா் அங்கு சென்று காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...