பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நெல் மூட்டைகள் இருப்பு: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை ஆட்சியா் கி.சாந்தி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:49 pm

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை ஆட்சியா் கி.சாந்தி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

டெல்டா மாவட்டங்களிலிருந்து தருமபுரி மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு வரபெற்றுள்ள நெல் மூட்டைகள் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, வெற்றிலைக்காரன் பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. சுமாா் 13,200 டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல தருமபுரி வட்டம், கடகத்தூா் கிராமம், பச்சனம்பட்டியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் சுமாா் 5,300 மெட்ரிக். டன் நெல் மூட்டைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நவீன பாலித்தீன் தாா்பாய்கள் கொண்டு மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நெல் மூட்டைகளை நெல் அரவைக்காக அனுமதி பெற்றுள்ள அரிசி ஆலைகளுக்கு தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, வெற்றிலைக்காரன் பாளையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, இந்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்து தொடா்ந்து பராமரித்திட வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தருமபுரி மண்டல மேலாளா் என்.சரவணன், நல்லம்பள்ளி வட்டாட்சியா் பெருமாள் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.