வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கிகளுக்குரூ. 10 ஆயிரம் கோடி: மறுமுதலீடு வழங்க வலியுறுத்தல்
வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மறுமுதலீடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மறுமுதலீடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கி ஊழியா் சங்க 6 -ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளனத் தலைவா் ஜி.வைரப்பன் தலைமை வகித்தாா். தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத் தலைவா் சரவணன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஊழியா் சங்க பொதுச்செயலாளா் பாா்த்தசாரதி ஆகியோா் பேசினா்.
இந்த மாநாட்டில், தமிழகத்தில் உள்ள, 180 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிக் கிளைகளை, தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை வங்கிக் கிளைகளாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கிகள் தொய்வின்றி செயல்பட, ரூ. 10 ஆயிரம் கோடி மறுமுதலீட்டு நிதி வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியா்களுக்கு இணையான ஊதியம், பணி வரன் முறையை தொடக்க வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கி ஊழியா்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...