ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

விடுமுறை நாளான இன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. 
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

விடுமுறை நாளான இன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. 

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் அருவிக்கு கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணமாக உள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை அண்மையில் நீக்கப்பட்டது. மேலும் ஞாயிறு விடுமுறை என்பதால் ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தைக்
காட்டிலும் தொடர்ந்து அதிகரித்தது. 

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் அருவியில் நீர்வரத்து குறைந்த போதிலும் வெயிலை சமாளிக்கும் வகையில் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளிலும், மாமரத்து கடவு பரிசல்துறை, நடைபாதை அருகில், முதலைப்பண்ணை ஆலாம்பாடி போட்ட மலை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரத்தில் குளித்து மகிழ்ந்தனர்.  அதன் பின்பு சின்னாறு பரிசல் துறையில் இருந்து மூன்று மணி நேரம் காத்திருந்து காவிரி ஆற்றின் அழகைக் காண கொத்துக்கள் பிரதான அருவி, மணல்மேடு, பெரிய பாணி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டு பாறை குகைகளை கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே இருந்ததால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் சத்திரம் முதலைப்பண்ணை, ஆலாம்பாடி, காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இரு ஓரங்களிலும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மேலும் நடைபாதை, மீன் விற்பனை நிலையம், முதலைப்பண்ணை, பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகள் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களை வாங்கி சமைத்து உணவு அருந்தும் பூங்கா காவிரிக் கரையோரப் பகுதிகளில் அமர்ந்து உணவருந்த மகிழ்ந்தனர். 

ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாவட்டத்திற்கு செல்லும் வகையில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்து நிலையம் ,சத்திரம் நாகர்கோவில், முதலைப்பண்ணை, நடைபாதை, சின்னாறு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com