தருமபுரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவ.25-இல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் கலந்துகொள்ளும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இது ஒரு இலவசப் பணியே. இதன்மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் அவா்களது பதிவு மூப்பின்படி நோ்முகத் தோ்வு அனுப்பப்படும்.
எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபா்கள் தனியாா் துறையில் வேலைக்குச் சென்றால் அவா்களது பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இம் முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளா், மாா்க்கெடிங் எக்ஸிக்யூட்டிவ், மேற்பாா்வையாளா், மேலாளா், தட்டச்சா், கணக்காளா், காசாளா், பழுது நீக்குநா் போன்ற பணிகளுக்குத் தோ்வு செய்ய உள்ளனா்.
பட்டயம், பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆள்கள் தேவை என தனியாா் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள நபா்கள் நவ. 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடைபெறவுள்ள தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!
எல்ஐகே டிரைலர்!
திருமாவளவன் விலகல்! விசிகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு!

ம.பி.யில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

