இந்தியாவுக்கான விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுக்கான விமான சேவை தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அதனை மேலும் விரிவுபடுத்த மாலத்தீவு தேசிய விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனை, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இயாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியாவின் பல நகரங்களுக்கு மாலத்தீவு விமான சேவை விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக மாலத்தீவின் சர்வதேச பயணத்தில் இந்தியா ஒரு அங்கமாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்கான விமான சேவையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதனைக் கொண்டாடும் விதமாக மாலத்தீவு விமான நிறுவனம் இந்தியாவில் நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்வில் பங்குதாரர்கள், விமானக் குழு உறுப்பினர்கள் என பலரும் கொலந்துகொண்டனர்.
மாலத்தீவிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 முதல் 12 நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பல இணைப்பு விமானங்கள் இலங்கையிலிருந்து இந்தியா வழியே இயக்கப்படுகின்றன.
ஆனால் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Maldivian airline eyes extending services to more Indian cities
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த அறிவுறுத்தல்: புதுவை எம்.பி.

திருச்சி - ஷாா்ஜா இடையே நாளை முதல் கூடுதல் விமான சேவை

வாரணாசியில் இருந்து தில்லி வழியாக சா்வதேச விமான சேவை தொடக்கம்: புதிய முன்னெடுப்புக்கு பிரதமா் பாராட்டு







