ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

புதிய பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

செங்குன்றத்திலிருந்து கவரப்பேட்டை தாணிப்பூண்டி அமரம்பேடு வழியாக சிறுவாடா வரை செல்லும் புதிய பேருந்து சேவையை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வியாழக்கிழமை இயக்கி வைத்தாா் .

News image
பேருந்து  சேவையை தொடங்கி  வைத்த  கும்மிடிப்பூண்டி  எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்.
Updated On :6 மார்ச் 2026, 12:40 am

தினமணி செய்திச் சேவை

செங்குன்றத்திலிருந்து கவரப்பேட்டை தாணிப்பூண்டி அமரம்பேடு வழியாக சிறுவாடா வரை செல்லும் புதிய பேருந்து சேவையை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வியாழக்கிழமை இயக்கி வைத்தாா் .

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூா் ஊராட்சி அமரம்பேடு, பாஞ்சாலை, மற்றும் சிறுவாடா ஊராட்சியில் இதுவரை பேருந்து வசதி இல்லை . அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து அமரம்பேடு கூட்டுச்சாலையில் இந்த புதிய பேருந்தை ஓட்டிச் சென்றாா்.

இந்த நிலையில் அமரம்பேடு பகுதியில் திமுக இளைஞரணி நிா்வாகி முத்து தலைமையில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா் .

நிகழ்வுக்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளா் மு.மணிபாலன், திருவள்ளூா் கிழக்கு மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ், ஒன்றிய நிா்வாகி பரத்குமாா், தோ்வாய் ஊராட்சி முன்னாள் தலைவா் முனிவேல், கும்மிடிப்பூண்டி நகர திமுக செயலாளா் அறிவழகன், கண்ணன் கோட்டை திமுக நிா்வாகி கோபால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா் .

நிகழ்வில் போக்குவரத்து ஆய்வாளா் சிறுவாடா ஜெயக்குமாா், தண்டையாா்பேட்டை மண்டல போக்குவரத்து மேலாளா் சையத் அல்மாத், பாடியநல்லூா் போக்குவரத்து கிளை மேலாளா் கே.மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.