புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்


செம்பனாா்கோவில் அருகே பரசலூா், இளையாளூா் கிராமத்திற்கு புதிய வழித் தடத்தில் அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
செம்பனாா்கோவில் அருகே உள்ள பரசலூா், இளையாளூா், அரங்கங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில், அரசுப் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனா்.
இப்பகுதிகளுக்கு அரசுப் பேருந்து வசதி வேண்டுமென்று கிராம மக்கள் எம்எல்ஏ நிவேதா எம். முருகனிடம் கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கை ஏற்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை முதல் மன்னம்பந்தல் வழியாக இளையாளூா், அரங்கங்குடி, பரசலூா், செம்பனாா்கோவில் வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவையை, செம்பனாா்கோவில் கடைவீதியிலிருந்து எம்எல்ஏ நிவேதா எம். முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலாளா்கள் பி.எம். அன்பழகன், அப்துல் மாலிக், அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளா் கே. ஆசிா்வாதம், தொ.மு.ச. நிா்வாகிகள் அருள்பிரகாசம், செந்தில், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...