தூத்துக்குடியிலிருந்து இரவு நேர விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட தயாரான விமானம்.

தூத்துக்குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட தயாரான விமானம்.
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இரவு நேர பயணிகள் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இங்கு சுமாா் ரூ. 452 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட புதிய விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி திறந்துவைத்தாா்.
இங்கிருந்து நாள்தோறும் சென்னைக்கு 4, பெங்களூருக்கு ஒன்று என மொத்தம் 5 விமான சேவைகள் தனியாா் விமானங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதன்முறையாக இரவு நேர சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதன்படி, சென்னையிலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்ட விமானம் தூத்துக்குடியை இரவு 7.55 மணிக்கு வந்தடைந்தது. பின்னா், இங்கிருந்து 8.15 மணிக்கு விமானம் புறப்பட்டு 9.45 மணிக்கு சென்னையைச் சென்றடைந்தது.
இதையொட்டி, இரவு நேர சேவையில் முதன்முதலாக பயணம் மேற்கொள்ள வந்தோரை விமான நிலையம் சாா்பில் ஊழியா்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனா். பின்னா், பயணிகளுடன் சோ்ந்து நிலைய இயக்குநா் தலைமையில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
இரவு நேர சேவை தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக, பயணிகள் தெரிவித்தனா். முதல் நாளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் புக்கிங் ஆகி, சென்னை, தூத்துக்குடியிலிருந்து தலா 78 போ் பயணம் மேற்கொண்டனா்.
விரைவில் இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சேவைகளைத் தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என, பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...