மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

என்ஜின் திடீா் செயலிழப்பு! புது தில்லியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

தில்லியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கப்பட்டது பற்றி...

News image

இண்டிகோ விமானம் - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:40 am IST

என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்ததால், தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் சனிக்கிழமை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 160 பயணிகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து புது தில்லிக்கு 160 பேருடன் சனிக்கிழமை பயணித்த இண்டிகோ விமானத்தின் (போயிங் 737) என்ஜின்களில் ஒன்று, அந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக செயலிழந்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளின்படி புது தில்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அனுமதியுடன் விமானம் பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விமானத்தில் உரிய பரிசோதனைகள் மற்றும் பழுதுபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.