8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஓடுபாதையில் குரங்குகள்: லக்னௌவில் தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்

லன்னௌ விமான நிலைய ஓடுபாதையில் குரங்குகள் குறுக்கே வந்ததால் இண்டிகோ விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

IndiGo flight aborts take-off at Lucknow after monkeys spotted on runway

இண்டிகோ விமானம். - கோப்புப் படம்

Published On :1 மே 2026, 6:30 pm IST

லன்னௌ விமான நிலைய ஓடுபாதையில் குரங்குகள் குறுக்கே வந்ததால் இண்டிகோ விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ விமான நிலைய ஓடுபாதையில் குரங்குகள் கூட்டம் குறுக்கே வந்ததையடுத்து, ராய்ப்பூர் நோக்கிச் செல்லவிருந்த இண்டிகோ விமானம் தனது பயணத்தை பாதியில் நிறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

வியாழக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் 150 பயணிகளுடன் புறப்படத் தயாரான இண்டிகோ விமானம், ஓடுபாதையில் 20-30 சதவீத தூரத்தைக் கடந்திருந்தபோது, குரங்குகள் குறுக்கே செல்வதை அதன் விமானிகள் கவனித்தனர். பின்னர், விமானிகள் உடனடியாக விமானத்தை நிறுத்தினர்.

இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், விமானம் மீண்டும் கொண்டு செல்லப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்ட பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் வனவிலங்கு மேலாண்மைக் குழுவினர் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளின்படி செயல்பட்டு ஓடுபாதையை சுத்தம் செய்தனர்.

அதன்பிறகு விமானப் போக்குவரத்து வழக்கம் போல் தொடர்ந்தது. இந்தச் சம்பவத்திற்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்னதாக, தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுபாதையின் அருகே குரங்குகள் இருப்பது குறித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Summary

An IndiGo flight bound for Raipur aborted its take-off at Lucknow airport after a group of monkeys was spotted crossing the runway, airport sources said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.