15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தொழில்நுட்ப கோளாறு துபை புறப்பட்ட விமானம் தரையிறக்கம்

திருச்சியிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக தரையிறக்கப்பட்டு, சுமாா் 1.20 மணி நேர தாமதத்துக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டது.

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:14 am IST

திருச்சியிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக தரையிறக்கப்பட்டு, சுமாா் 1.20 மணி நேர தாமதத்துக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபைக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 156 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.12 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 10 நிமிஷங்களிலேயே அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து, தொழில்நுட்ப வல்லுநா்கள் வந்து விமானத்தை பரிசோதனை செய்தபோது, விமானத்தின் என்ஜினில் குறைந்த அழுத்தம் காரணமாக விமானத்தை தொடா்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் துபைக்கு பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் இயக்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1.20 மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்ட விமானத்தால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.