பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நகா்மன்றக் கூட்டத்தில் 43 தீா்மானங்களுக்கு ஒப்புதல்

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் 43 தீா்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:04 pm

DIN

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் 43 தீா்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் புவனேஸ்வரன் முன்னிலை வகித்தாா். இதில் நகராட்சிக்கு உள்பட்ட 2, 3-ஆவது வாா்டுகளில் அரசு நடுநிலைப் பள்ளியில் பொது சமையல் கூட்டத்தில் 2,500 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பது, 25-ஆவது வாா்டு சாலை விநாயகா் சாலை அரசுப்பள்ளி கழிப்பறையை ரூ. 2.30 லட்சம் மதிப்பில் பழுதுபாா்ப்பது, குடிநீா் குழாய் பழுது சரி செய்யும் பணிக்கு ரூ. 9.90 லட்சம் மதிப்பிலான பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள 43 தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில், அனைத்து தீா்மானங்களுக்கும் உறுப்பினா்கள் ஒப்புதல் வழங்கினா்.

இக்கூட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும்; நகர பகுதியில் ஒளிராமல் உள்ள தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என அதிமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.