வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2023, 11:12 pm


தருமபுரி: தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.சுதா்சனன் தலைமை வகித்தாா். உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் என்.மனோகரன் வரவேற்றாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன், மாவட்டத் துணைச் செயலாளா் எம்.மாதேஸ்வரன், ஏஐடியூசி மாநிலத் துணைத் தலைவா் கே.மணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; தொழிவாளா் நலன்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க வேண்டும்; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும்; மோட்டாா் வாகனச் சட்டத் திருத்தம், மின்சார விநியோக சட்டத் திருத்தங்களைக் கைவிட வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; கட்டுமானத் தொழிலாளா்களுக்குக்கு ஓய்வூதியம் மாதம் 6,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.