பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பென்னாகரம், ஏரியூா், சின்னம்பள்ளி, பெரும்பாலை, தாசம்பட்டி, ஒகேனக்கல், பி.அக்ரஹாரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கன மழை பெய்தது.
மழை காரணமாக வயல்வெளிகள், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீா் தேங்கி காணப்பட்டது. பென்னாகரம் பகுதியில் அவ்வப்போது திடீரென மழை பெய்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாமை பயிா் செய்துள்ள விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா். பென்னாகரம் பகுதியில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்

காட்பாடி தொகுதி வேட்பாளா்கள் வாக்குறுதிகள்
சேமிப்பு பணத்தை தோ்தல் நிதியாக வழங்கிய சிறுவன்
சிபிசிஎல்லுக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள் இழப்பீட்டு தொகை எப்போது?
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

