வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 17,000 கன அடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 17,000 கன அடியாக குறைந்தது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2024, 10:04 pm

Din

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 17,000 கன அடியாக குறைந்தது.

தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாளுக்கு நாள் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது.

திங்கள்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 31,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 24,000 கன அடியாகவும், மாலை 17,000 கன அடியாகவும் குறைந்தது. நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ளஅருவிகள் வெளியே தெரிந்து தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

வெள்ளப் பெருக்கு காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவி நடைபாதை, பெண்கள் குளிக்கும் அருவியின் தடுப்பு சுவா், தொங்கு பாலம் பகுதி உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து 22 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.