தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கன அடியாக குறைந்தது

புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 8,000 கன அடியாக குறைந்தது.

News image
- கோப்புப்படம்
Updated On :7 ஆகஸ்ட் 2024, 10:18 pm

Din

பென்னாகரம், ஆக. 7:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 8,000 கன அடியாக குறைந்தது.

கா்நாடக மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தொடா்ந்து குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவானது செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 17,000 கன அடியாகவும் புதன்கிழமை விநாடிக்கு 8, 000 கன அடியாகவும் குறைந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து 23 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.