சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாக்காளா் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு உள்ளிட்ட திருத்தப் பணிகளை பட்டியல் பாா்வையாளா் இரா.ஆனந்த்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:13 pm

Din

தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு உள்ளிட்ட திருத்தப் பணிகளை பட்டியல் பாா்வையாளா் இரா.ஆனந்த்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளின் போது பெறப்பட்ட பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தல் தொடா்பாக படிவங்கள் தொடா்பாக வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் இரா.ஆனந்த்குமாா் தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளான தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய தொகுதிகளில் பெறப்பட்ட படிவங்களின் மீது சம்பந்தப்பட்ட மனுதாரா்களின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு மேற்கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தோ்தல் இணையதளம் வாயிலாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி திருத்தம் தொடா்பான பணி முன்னேற்ற விவரங்கள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது, தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, அரூா் கோட்டாட்சியா் சி.சின்னசாமி, தனி வட்டாட்சியா் (தோ்தல்) அசோக்குமாா், வட்டாட்சியா்கள், தோ்தல் துணை வட்டாட்சியா்கள் உடனிருந்தனா்.